ADDED : ஜூலை 31, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் பகுதியில் வேப்பம்பழம் சீசன் துவங்கியதால் முதியோர், விவசாயிகள் பழங்களை சேகரித்து வருவாய் பார்க்கின்றனர்.
இப்பகுதியில் வறட்சியால் விவசாயம் பாதித்து, விவசாயிகள் வேலையிழந்து இருந்தனர். இந்நிலையில் வேப்பம்பழம் சீசன் துவங்கி இருப்பதால் அவற்றை சேகரித்து விதையை பிரித்தெடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், ‘‘கடந்தாண்டு ஒரு கிலோ வேப்பங்கொட்டை ரூ.90 வரை விற்றது. தற்போது அதிக வரத்து இருப்பதால் கிலோ ரூ.50க்கு விற்கிறது. ஆனாலும் தற்போது வேப்பம்பழம் கைகொடுக்கிறது. அதுவும் இன்னும் 2 மாதங்கள் வரை தான் சீசன் இருக்கும். அதன் பின் விவசாய வேலைகளை துவங்க வேண்டும்’’ என்றனர்.
