/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விமான நிலையத்தில் புதிய கருவி பொருத்தம்
/
விமான நிலையத்தில் புதிய கருவி பொருத்தம்
ADDED : ஆக 09, 2024 12:57 AM
அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் அதி நவீன தொழில் நுட்பத்தில் டி.வி.ஓ.ஆர். எனப்படும் புதிய டாப்ளர் அதிக அதிர்வெண் ஓம்னி ரேஞ்சை வெளிப்படுத்த உதவும் கருவி நேற்று பொருத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டில்லி, மும்பை, துபாய், சிங்கப்பூர், இலங்கைக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.
விமான நிலையத்தில் பழைய டி.வி.ஓ.ஆர். கருவியின் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய டி.வி.ஓ.ஆர். தொழில்நுட்பத்தின் மூலம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விமானங்கள் வருகை, புறப்படும் வழிகளை வரையறுப்பதற்கும், வான்வெளி கட்டுப்பாடு சிறப்பாக செயல்பட துல்லியமான தகவல்களை பெறவும் உதவும்.
இது மதுரையில் விமான போக்குவரத்து வளர்ச்சிக்கான சாத்தியத்தை மேம்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.