ADDED : ஜூலை 14, 2026 10:42 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஜூலை 15 -
மதுரை காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டி சித்தி விநாயகர், மந்தை கருப்பணசுவாமி, பேசும் கன்னிமார் கோயில்களில் ஆனி அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.
ஏழு வகை மலர் மாலைகள், நாணல் புல், வண்ண மலர்களால் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பாறைபட்டி கிராமத்தினர் செய்திருந்தனர்.
