/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் மழைக்கு தாங்காத புது ரோடு
/
மதுரையில் மழைக்கு தாங்காத புது ரோடு
ADDED : மே 12, 2024 03:48 AM
மதுரை: மதுரை டி.வி.எஸ்.நகரில் புதிதாக அமைக்கப்பட்ட தார் ரோடு மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பள்ளம் ஏற்பட்டு உள்வாங்கியது. அவ்வழியாகச் சென்ற வாகனம் பள்ளத்தில் சிக்கியது.
மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணி நடக்கிறது. குழாய்களை பதித்த பின் சம்பந்தப்பட்ட பகுதிகளில் புதிதாக தார் ரோடு அமைக்கப்படுகிறது. இரு நாட்கள் கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
ஒரு வாரத்திற்கு முன் டி.வி.எஸ்.நகர் ராஜம் ரோடு பகுதியில் குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்பட்டன. மேற்பகுதியில் தரமற்ற கான்கிரீட் கலவை இடப்பட்டதால் மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தார்ரோடு 2 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது. இயந்திரங்களைக் கொண்டு சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அவ்வழியாகச் சென்ற ஒரு சரக்கு வாகனத்தின் சக்கரம் சிக்கிக் கொண்டது. வாகனத்தை இயந்திரம் மூலம் மீட்கும் பணி நடந்தது.