தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ புதிய ரயில் திட்டங்கள் தேவை

புதிய ரயில் திட்டங்கள் தேவை

புதிய ரயில் திட்டங்கள் தேவை


ADDED : ஜூலை 01, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 07:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை, மேலுார், காரைக்குடி வரை புதிய ரயில் தடங்களை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடம் கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் கூறியதாவது: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள வந்தேபாரத் ரயில்கள் குறைந்த நேரத்தில் தொலைதுாரத்திற்கு செல்வதால் பயணிகளிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கன்னியாகுமரி –- சென்னை, ராமேஸ்வரம் -– கோவை, தென்காசி -– சென்னை, துாத்துக்குடி - – சென்னை மார்க்கத்தில் கூடுதல் ரயில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தின் பல இடங்களில் இரட்டை வழி ரயில் பாதை இருந்தாலும் சிலவற்றில் அதன் பயன்பாடு நுாறு சதவீதத்தை தாண்டி உள்ளது. குறிப்பாக சென்னை – துாத்துக்குடி செல்லும் ரயில் பாதை, சென்னை – நாகர்கோவில் செல்லும் ரயில் பாதை அதிக பயன்பாட்டில் உள்ளதால் இங்கு மூன்றாவது ரயில் பாதை அமைக்க வேண்டும்.

மதுரை –- மேலுார் –- காரைக்குடி வரை புதிய ரயில் தடங்களை அமைக்க வேண்டும். மதுரை - – விளாத்திகுளம் –- துாத்துக்குடி ரயில் பாதை திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பணியையும் திண்டுக்கல் – - சபரிமலை ரயில் திட்டத்தையும் வேகமாக முடிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us