/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய்கள் சப்ளை இல்லை
/
ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய்கள் சப்ளை இல்லை
ADDED : பிப் 24, 2025 03:42 AM
பேரையூர் : டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதித்தபின்னும், வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்படாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.25 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. இதன்மூலம் ஒரு நபருக்கு சராசரியாக தினமும் 55 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்காக ஊராட்சிகளில் ஒரு ஆண்டுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்படி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு, மேல்நிலை தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஆனால் குழாய் பதித்த பின்னரும் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான இணைப்பு கொடுக்காததால் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தற்போது வரை குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
தினமும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உடனடியாக குழாய் இணைப்பு கொடுத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

