/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போராட்டத்தில் பங்கேற்க சத்துணவு ஊழியர் முடிவு
/
போராட்டத்தில் பங்கேற்க சத்துணவு ஊழியர் முடிவு
ADDED : பிப் 22, 2025 05:40 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விசாலாட்சி தலைமை வகித்தார். செயலாளர் சந்திரபாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பிப்.25ல் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடக்க உள்ளது. இதில் திரளாக பங்கேற்க வேண்டும். அனைத்து சத்துணவு ஊழியர்களையும் காலமுறை ஊதியத்தில் முறைப்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டே செயல்படுத்த வேண்டும். போர்க்கால அடிப்படையில் 63 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் இந்திராணி நன்றி கூறினார்.