நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: வெள்ளலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் கேட்டுகள் பூட்டாததால், பயன்படாத வகுப்பறை சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறியது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று பி.டி.ஓ., உலகநாதன், ஊராட்சி தலைவர் கவுசிகன், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கட்டடத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.