/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாசன கால்வாயை மூடிய அதிகாரிகள்; 80 ஏக்கர் தரிசான அவலம்
/
பாசன கால்வாயை மூடிய அதிகாரிகள்; 80 ஏக்கர் தரிசான அவலம்
பாசன கால்வாயை மூடிய அதிகாரிகள்; 80 ஏக்கர் தரிசான அவலம்
பாசன கால்வாயை மூடிய அதிகாரிகள்; 80 ஏக்கர் தரிசான அவலம்
ADDED : ஆக 07, 2024 06:15 AM

சோழவந்தான் : சோழவந்தான் அருகே நாச்சிகுளம் பகுதிக்கு வைகை பெரியாறு பிரதான கால்வாய் நாச்சியார், முனியாண்டி கோயில் மடைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வருகிறது. பள்ளப்பட்டி - சோழவந்தான் இடதுபுற ரோட்டில் மதுரை மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்டத்தில் 'மெகா சைஸ்' குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டி மூடினர்.
இதில் தார் கற்களுடன் எஞ்சிய மண் அகற்றப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் சாலை அமைத்த நெடுஞ்சாலைத் துறையினர் ரோட்டோரம் 3 கி.மீ., நாச்சிகுளம் வரை செல்லும் கால்வாய் மீது மண்ணைத் தள்ளி மூடி விட்டனர். இதனால் ஜூலை 3ல் தண்ணீர் திறந்தும் பாசன வசதி பெறும் 150 ஏக்கரில் 70 ஏக்கரில்தான் சாகுபடி நடக்கிறது. மற்றவை பாசனமின்றி தரிசாக விடப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
விவசாயி கந்தசாமிகூறியதாவது: கால்வாய்க்குள் மண்ணை தள்ளியபோது சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தடுத்தோம். மறுநாளே அள்ளி விடுகிறோம் என கூறிய நெடுஞ்சாலைத்துறையினர் இதுவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் கால்வாயில் வடிந்து செல்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. தண்ணீர் செல்லாமல் விவசாயம் அதிகம் பாதித்துள்ளது. கால்வாய் பாசனம் அல்லது இழப்பீடு கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.