/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிகாரிகளே... எப்போதான் நெல் கொள்முதல் செய்வீங்க விவசாயிகளின் வேதனை குரல்

ADDED : ஜூலை 25, 2024 04:53 AM

மேலுார்: அட்டப்பட்டியில் நெல் கொள்முதல் செய்வதற்கான இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்த பிறகும் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
அட்டப்பட்டியில் கிணற்றுநீர் பாசனத்தில் 300 ஏக்கருக்கும் மேல் கோடை சாகுபடி செய்து நெல் அறுவடை நடக்கிறது. இதனை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் சார்பில் அய்யனார்கோயில் முன்பு செயல்படும் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.
இவ்வாண்டு வழக்கம் போல் நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் இடத்தை அதிகாரிகள் உறுதிபடுத்தினர். இதையடுத்து விவசாயிகள் நெல்லை இங்கு குவித்து வைத்துள்ளனர். ஆனால் இதுவரை கொள்முதல் துவங்கவில்லை.
விவசாயி சந்திரன் கூறியதாவது:
ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து, நெல்லை விளைவித்து, கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து 4 நாட்களாகிறது. கொள்முதல் துவங்காததால் இரவு, பகலாக காத்து கிடக்கிறோம். திறந்த வெளியில் 500 க்கும் கூடுதலாக நெல் மூடைகளை வைத்திருப்பதால் வெயில், மழையில் நனைந்து வீணாகிறது.
நெல் வெயிலில் காய்வதால் எடை குறைவதுடன், குருணையாகி நொறுங்கும் அளவு மாறிவிடும். விவசாயிகள் பாதிக்காதவாறு உடனே நெல் கொள்முதலுக்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.