ADDED : ஜூலை 17, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
எழுமலை: எம்.கல்லுப்பட்டி அருகே டி.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் அழகுராஜா 45, ஆனைத்துறை 48.
உறவினர்களான இவர்கள் வீடுகள் அருகருகே உள்ளன. நேற்று முன்தினம் வீட்டின் அருகே ஆனைத்துறையின் மாடு கட்டுவதில் தகராறு ஏற்பட்டது. இருதரப்பும் தாக்கிக் கொண்டனர். அழகுராஜாவின் மாமனார் வெள்ளைச்சாமி புகாரில் 11 பேர் மீதும், ஆனைத்துறை புகாரில் 7 பேர் மீதும் எம்.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தாக்குதலில் காயமுற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அழகுராஜா இறந்தார். ஆனைத்துறை தரப்பினரை போலீசார் தேடி வருகின்றனர்.
