ADDED : செப் 08, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மதுரை மாவட்டத்தை பசுமையாக மாற்ற பார்வை பவுண்டேஷன் இளம் மக்கள் இயக்கத்தினர் நேற்று ஒரு லட்சம் விதை பந்துகளை மேலுார் - - திருமங்கலம் வரை நெடுஞ்சாலையில் விதைப்பு செய்தனர்.
கருங்காலக்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், சக்கிமங்கலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற தென்னவன் துவக்கி வைத்தனர். யானைமலை கிரீன் பவுண்டேஷன் குழுவினரும் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் சோழன் குபேந்திரன் கூறுகையில், ''ஆண்டுக்கு ஒரு கோடி மரம் வீதம் 10 ஆண்டுகளில் 10 கோடி மரம் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் 87 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வருகிறோம்'' என்றார்.