தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...


ADDED : ஜூலை 05, 2026 06:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 06:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* தெருநாய்கள் தொல்லை மதுரை எச்.எம்.எஸ்., காலனி, கோ ஆப்டெக்ஸ் காலனி பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. தனியாக செல்வோரை துரத்திச் சென்று தாக்குகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடவே பயப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- விஸ்வநாதன், எச்.எம்.எஸ்., காலனி.

* சமூக விரோதிகள் நடமாட்டம் பழைய குயவர்பாளையம் பகுதியில் இரவு நேரம் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தனியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்கின்றனர். தடை செய்த போதைப்பொருள்களுடன் வலம்வரும் சமூகவிரோதிகளை போலீசார் கண்காணிக்க வேண்டும்.

–பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.

* பல்லாங்குழி ரோடு மதுரை ரயில்வே மைதானம் முன்பகுதியில் உள்ள ரோடு பழுதடைந்து விட்டது. பல்லாங்குழி போல் மேடு, பள்ளமாக உள்ள ரோட்டால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா

- செந்தில்குமார், காளவாசல்.

* குப்பை தொல்லை தாசில்தார் நகர் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் வராமல் உள்ளனர். இதனால் பொது இடங்களில் இப்பகுதியினர் இரவு நேரங்களில் குப்பையை கொட்டி விடுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் பயனில்லை.

- நாகரத்தினம், தாசில்தார் நகர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us