தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே


ADDED : ஏப் 01, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2024 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போக்குவரத்து வசதி தேவை

வேடர்புளியங்குளம் வி.பி சிந்தன் நகர் பகுதியில் மக்கள் மதுரை நகரை நோக்கி பயணிக்கும் அவசியம் உள்ளதால் போக்குவரத்துக்காக கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரேணுகாதேவி, சிந்தன் நகர்.

மின் கம்பத்தை அகற்ற வேண்டும்

திருநகர் டூ திருமங்கலம் மெயின் ரோட்டில் மின் கம்பம் நடுவில்உள்ளதால் விபத்தை சந்திக்க நேரிடுகிறது. மின்கம்பத்தை ரோட்டோரம் மாற்றி அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சிவக்குமார், திருநகர்.

கழிவுநீர் தேக்கம்

மதுரை மாநகராட்சி வார்டு 36 முகவை தெருவின் கிழக்கு கடைசியில் காலி பிளாட்டில் சாக்கடைக் கழிவு நீர் தேங்கியிருப்பதால் நோய் தொற்றும் அபாயம் ஏற்படுகிறது. இதனை சீர் செய்ய உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும்.

-- நாகசுப்பிரமணியன், முகவை தெரு.

கழிவுநீர் தேக்கம்

மாநகராட்சி வார்டு 4 பி அண்ட் டி நகர் பட்டிமேடு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு கழிவுநீர் காலி மனைகளில் தேங்குகிறது. துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்ய வேண்டும்.

- - பூங்குழலி, பட்டிமேடு.

வேகத்தடை வேண்டும்

மதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகர், பொற்குடம் அபார்ட்மென்ட் இணைக்கும் மெயின் ரோட்டில் தடுப்பு இருந்தும் வாகனங்கள் வேகம் குறையாமல் வருவதால் இருபுறமும் சிக்னல் அமைக்க போக்குவரத்து போலீசார் முன்வரவேண்டும்.

-- ஹரிஷ், துரைசாமி நகர்.

ரோட்டை சீரமைக்க வேண்டும்

மதுரை பொன்மேனி ஜீவனா பள்ளி எதிரில் திருவள்ளுவர் தெரு விரிவாக்கத்தில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டியதால் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. பெரியவர்கள் தடுமாறுகின்றனர்.

-- துளசிபாய், பொன்மேனி.

தெருவும், தெருவிளக்கும் சரியில்லை

மதுரை தெற்காவணி மூல வீதி மேட்டுக் கம்மாள தெருவில் பல நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. தெருவும் பெயருக்கு ஏற்ப மேடாகவும், பள்ளமாகவும் இருப்பதால் மோசமாக உள்ளது.

- - வெங்கட்ராமன், தெற்காவணி மூல வீதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us