sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே ///

/

ஒரு போன் போதுமே ///

ஒரு போன் போதுமே ///

ஒரு போன் போதுமே ///


ADDED : மே 01, 2024 07:36 AM

Google News

ADDED : மே 01, 2024 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளத்தை சரிசெய்யுங்க

வாகைக்குளம் பஸ்நிலையத்தில் உள்ள நிழற்குடைக்கு முன்னால் மழைநீருக்காகத் தோண்டிய பள்ளம் மூடப்படாமல் உள்ளது. உடனடியாக மூட வேண்டும்.

-விஜயபிரியா, வாகைக்குளம்

கால்வாயை சுத்தம் செய்யுங்க

வடபழஞ்சி ஊராட்சி நாகமலை புதுாரில் கால்வாயை துார்வாராமல் இருப்பதால் நோய் தொற்றும் அபாயம் உள்ளது. சில இடங்களில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாட்டம் உள்ளது. உடனே நடவடிக்கை தேவை.

- சிவகுமார், வடபழஞ்சி

கழிவுநீர் வெளியேற்றம்

விளாங்குடி மீனாட்சி நகர் 5வது குறுக்குத் தெருவில் கழிவுநீர் வெளியேறி ரோடுகளிலும், காலி மனைகளிலும் தேங்கி நோய் பரப்புகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தெரசா, விளாங்குடி

ஆக்கிரமிப்பை அகற்றுங்க

தெற்கு மாரட் வீதி வடமலையான் மருத்துவமனை அருகே நடைபாதையில் வாகனங்கள், கடைகள் ஆக்கிரமித்துள்ளது. ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அசோக், தெற்கு மாரட் வீதி

செட்டை அப்புறப்படுத்தலாமே

முனிச்சாலை ரோடு வெற்றிலை பேட்டை பஸ் ஸ்டாப்பில் நடைபாதையை மறைத்து கட்டடம் கட்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் வெயிலில் நிற்கும் அவலம் உள்ளது. உடனே செட்டை அகற்ற வேண்டும்.

- சாபுதாஹிர், முனிச்சாலை.

சாக்கடை கழிவு அவலம்

அன்சாரி நகர் 5வது தெருவில் சாக்கடை கழிவை அகற்றாததால், வீட்டிற்குள் வருகிறது. இங்கு வசிக்கும் மக்கள் அவதியடைகின்றனர். மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

- நுார் ஹூசைன், மஹாபூபாளையம்.

மின்கம்பத்தால் இடையூறு

திருநகர் - திருமங்கலம் ரோட்டில் இரும்பு மின்கம்பம் ரோட்டின் பாதி இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது. மின்கம்பத்தை மாற்றி அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்

- சிவகுமார், திருநகர்.

குப்பையை அகற்றணும்

தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் முன்பாக குப்பையை கொட்டுகின்றனர். இப்பகுதியில் மாடுகள் அதிகமுள்ளதால், கோயில் வளாகம் அசுத்தம் ஆகிறது. மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கை தேவை.

- ஜாபர், எஸ் கிருஷ்ணன் கோயில் தெரு.

ஏ.டி.எம்., இயங்கவில்லை

மதுரை டி.வி.எஸ்., நகர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையில் ஏ.டி.எம்., இயந்திரம் இயங்கவில்லை. அவசர நேரங்களில் மக்கள் பணம் எடுக்கமுடியாமல் அவதிப்படுகின்றனர். உடனடியாக சரி செய்ய வேண்டும்.

- மோகன், சத்திய சாய் நகர்.

மேன்ேஹால் சரியில்லை

மதுரை மேலமாரட் வீதி சந்திப்பில் கழிவுநீர் மூடி சரியாக மூடப்படாமல் உள்ளது. நெரிசல் மிகுந்த அந்த ரோட்டில் வாகனங்கள் அதைச் சுற்றி செல்வதால் பொதுமக்கள் சிரமமடைகின்றனர். எனவே மூடியை சரிசெய்ய வேண்டும்.

- கபீர், மேலமாரட் வீதி.

கடல் போல கழிவு நீர்

மதுரை பைபாஸ் ரோடு துரைச்சாமி நகர், விவேக் நகர் மற்றும் ஸ்வரூப் தெருக்களில் காலி இடங்களில் அடிக்கடி கழிவு நீர் தேங்குகிறது. வீடு அருகாமையிலும் பெருகி வருவதால் கொசுத் தொல்லையும் இருக்கிறது. விரைவில் இதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

- முத்துராமசாமி, துரைச்சாமி நகர்






      Dinamalar
      Follow us