/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெங்காயம், தக்காளிக்கு காப்பீடு பண்ணலாம்
/
வெங்காயம், தக்காளிக்கு காப்பீடு பண்ணலாம்
ADDED : ஜூலை 05, 2024 05:09 AM
மதுரை: தோட்டக்கலை பயிர்களுக்கு மதுரை மாவட்டத்தில் மாநில அரசு மானியத்துடன் காரீப் பருவத்திற்கான வாழை, வெங்காயம், தக்காளி, மரவள்ளி பயிர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் சொந்தமாக நிலம் வைத்துள்ள மற்றும் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
பயிர்க்கடன் பெற்ற, பெறாத விவசாயிகளுக்கு ஒரேவிதமான காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
மதுரை கிழக்கு, மேற்கு, மேலுார், கொட்டாம்பட்டி, அலங்காநல்லுார், வாடிப்பட்டி வட்டாரங்களில் வாழை பயிருக்கு காப்பீடு செய்யலாம். வாடிப்பட்டியில் மரவள்ளிப் பயிர், சேடபட்டி, அலங்காநல்லுார், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டியில் வெங்காய பயிருக்கு காப்பீடு செய்யலாம். திருமங்கலத்தில் தக்காளி விவசாயிகள் பயன்பெறலாம்.
செப். 16 க்குள் வாழைக்கு ஏக்கருக்கு ரூ.1372 பிரிமீயம் செலுத்தினால் இழப்பு ஏற்படும் போது ரூ.68ஆயிரத்து 600 காப்பீட்டுத் தொகை, மரவள்ளி ஏக்கருக்கு ரூ.477 செலுத்தினால் ரூ.23ஆயிரத்து 850 காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
ஆக. 31 க்குள் வெங்காயம் ஏக்கருக்கு ரூ.815 செலுத்தினால் காப்பீட்டுத்தொகை ரூ.40 ஆயிரத்து 750, தக்காளி ஏக்கருக்கு ரூ.371 செலுத்தினால் ரூ.18ஆயிரத்து 550 கிடைக்கும்.
கடந்தாண்டை விட 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக பிரிமீயத்தொகை குறைந்துள்ளதால் விவசாயிகள் பயன்பெறலாம்.