ADDED : மே 09, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலத்தில் சோழவந்தான் ரோடு வாகைக்குளம் பிரிவில் அ.தி.மு.க., ஒன்றியம் சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் உதயகுமார் துவக்கி வைத்தார்.
மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், அவைத் தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், பொருளாளர் சாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், ஆண்டிச்சாமி, மின்னல் கொடி உட்பட பலர் பங்கேற்றனர். பொது மக்களுக்கு நீர், மோர், சர்பத் உட்பட பல்வேறு வகை குளிர்பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.