ADDED : ஜூன் 12, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி மதுரையில் கலெக்டர் தலைமையில் செயல்படும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மதுரை மாவட்ட கிளை சார்பில் பல்வேறு பகுதிகளில் ரத்ததான முகாம் நடக்கிறது.
நேற்று தேனி ரோடு பகுதி பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தில் நடந்தது. இன்று (ஜூன் 12) திருப்பரங்குன்றம் ஆப்டின் நிறுவனத்திலும், ஜூன் 15ல் கோவில் பாப்பாக்குடி பகுதி மகரிஷி பள்ளியிலும் ரத்ததான முகாம்கள் நடக்க உள்ளன. இதில் பொதுமக்கள் இணைந்து ரத்ததானம் செய்யலாம் என சங்க செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.