ADDED : ஜூன் 27, 2026 08:33 PM

அ நிறம் | அளவு
மதுரை: ஒத்தகடை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (ஜூன் 29) காலை 10:00 மணிக்கு ‘விளைநிலங்களை காப்போம்’ இயக்கத்தின் மூலம் இயற்கை விவசாயம், உரங்களின் சமச்சீர் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற பயிர் சாகுபடி தொழில்நுட்பம், பூச்சி, நோய்களை தாங்கி வளரும் ரகங்கள் குறித்த அறிமுகம், மண் பரிசோதனை அடிப்படையில் உரப் பயன்பாடு, உயிர் உரங்களின் பயன்பாடு, இயற்கை வழியில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்படும். விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு: 99652 88760.
