ADDED : ஜூலை 04, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல் மற்றும் பயறுவகை பயிர்களில் உயர் விளைச்சல் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். சாகுபடி நுட்பங்கள் குறித்து வேளாண் விரிவாக்க கல்வி இயக்குநர் முருகன் பேசினார். ஏ.டி.டி. 54 ரக நெல், மதுரை 1 ரக குதிரைவாலி, வம்பன் 11 ரக உளுந்து விதைகள், தீவனப்புல் கரணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இணைப் பேராசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.