ADDED : மார் 31, 2024 04:41 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை வேளாண் கல்லுாரியில் விவசாயிகள் அதிக மகசூல் பெறும் வகையில் நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
பெரியாறு வைகை பாசன விவசாயிகளுக்காக ஆதாரநிலை தரச்சான்று பெற்ற 30 கிலோ பைகளில் விற்பனைக்கு உள்ளது. ஐ.ஆர். 20 ரகம் கிலோ ரூ.42, சி.ஆர். 1009 துணை 1 ரகம் ரூ. 40, ஆடுதுறை 39 ரகம் கிலோ ரூ.44 க்கு கிடைக்கும். விருப்பத்தின் பேரில் பார்சல் மூலம் அனுப்பப்படும். இணையதள பண பரிவர்த்தனை வசதியும் உண்டு என உளவியல் துறை தலைவர் ராகவன் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு: 94420 54780.
