/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பராமரிப்பு தொகை குறைவால் திணறும் ஊராட்சி நிர்வாகம்
/
பராமரிப்பு தொகை குறைவால் திணறும் ஊராட்சி நிர்வாகம்
பராமரிப்பு தொகை குறைவால் திணறும் ஊராட்சி நிர்வாகம்
பராமரிப்பு தொகை குறைவால் திணறும் ஊராட்சி நிர்வாகம்
ADDED : மார் 03, 2025 04:54 AM
பேரையூர் : ஊராட்சிகளுக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் ரூ.லட்சக்கணக்கில் வழங்கிய மாதாந்திர பராமரிப்பு தொகையை, சில ஆயிரமாக குறைந்ததால் ஊராட்சி நிர்வாகங்கள் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன.
மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் தெருவிளக்கு, குடிநீர் பராமரிப்பு, மின்மோட்டார் பழுது பார்க்கும் பணிகள், மருந்து தெளித்தல் உள்ளிட்டவற்றை,மாநில நிதி குழு மானிய நிதியில் இருந்து செய்து வந்தனர். மாதாந்திர பராமரிப்பு தொகையாக ஊராட்சி மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட்டது.
மாநில நிதி குழுவின் மாநில நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை ஊராட்சித் தலைவர்கள் பொறுப்பில் இருக்கும் வரை நிதி முறையாக வழங்கப்பட்டது.
இந்த நிதி தற்போது ரூ.2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இதனால் ஊராட்சி செயலர்கள் எந்த பராமரிப்பு பணியும் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
ஊராட்சி செயலர்கள் கூறியதாவது:
ஒரு ஊராட்சியில் மூன்று முதல் ஐந்து கிராமங்கள் வரை உள்ளன. குடிநீர் மோட்டார் பழுதடைந்தால் அதை சரி செய்ய ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது.
தெருவிளக்கு, குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் உட்பட பல்வேறு செலவினங்கள் உள்ளன. எனவே எப்போதும் வழங்குவது போல் மானிய நிதியை மாநில அரசு வழங்க வேண்டும் என்றனர்.