ADDED : மார் 30, 2024 04:14 AM

அ நிறம் | அளவு
பாலமேடு : பாலமேடு வடக்கு தெரு செல்லத்தம்மன், காளியம்மன் கோயில் பங்குனி உற்ஸவம் 3 நாட்கள் நடந்தது.
முதல் நாள் நகைப்பெட்டி எடுத்து கோயில் வந்து செல்லத்தம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அன்றிரவு காளியம்மனுக்கு கரகம் ஜோடித்து கோயில் வந்து வழிபட்டனர். பொங்கல் பானை, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. பொங்கல் வைத்து, கிடா வெட்டி வழிபட்டனர். பொது மகாசபை கட்டடத்தில் இருந்து பழபெட்டி ஊர்வலம் எடுத்து வந்து அம்மனுக்கு பழ அபிஷேகம் செய்தனர். மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவுபெற்றது. ஏற்பாடுகளை வடக்கு தெரு பொது மகாசபை சங்கத்தினர் செய்திருந்தனர்.
