ADDED : ஜூலை 13, 2024 04:44 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதி கிராமங்கள், எழுமலை பேரூராட்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் அவ்வப்போது கிடைக்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலையில் இருந்தே நெட்வொர்க் இல்லாமல் போனது. பெரும்பாலும் அரசு அலுவலகங்கள், அதிகாரிகளிடம் பி.எஸ்.என்.எல்., இணைப்புகளே இருப்பதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
