/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'அட்டாக்' பாண்டிக்கு பரோல்: உயர்நீதிமன்றம் உத்தரவு
/
'அட்டாக்' பாண்டிக்கு பரோல்: உயர்நீதிமன்றம் உத்தரவு
'அட்டாக்' பாண்டிக்கு பரோல்: உயர்நீதிமன்றம் உத்தரவு
'அட்டாக்' பாண்டிக்கு பரோல்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 01, 2024 11:28 PM

மதுரை : மதுரை வில்லாபுரம் 'அட்டாக்' பாண்டி. கடந்த தி.மு.க., ஆட்சியில் வேளாண் விற்பனைக்குழுதலைவராக இருந்தவர். மதுரையில் ஒரு நாளிதழ்அலுவலக எரிப்பு வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த பொட்டு சுரேஷ் மதுரையில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கிலும்'அட்டாக்' பாண்டி கைதானார். மதுரை மத்தியசிறையில் உள்ளார்.
அவரது மனைவி தயாள், 'உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை பெறுகிறேன். கணவரின் சொத்துக்களை விற்க வேண்டியுள்ளது. அவரது உதவி தேவை. அவருக்கு 30 நாட்கள் பரோல் அனுமதிக்க சிறைத்துறை டி.ஐ.ஜி.,க்கு மனு அனுப்பினேன். நிராகரித்தார். அதை ரத்து செய்து பரோல் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.ராஜசேகர்அமர்வு: 'அட்டாக்' பாண்டிக்கு 7 நாட்கள் பரோல் அனுமதிக்கப்படுகிறது. வழிக்காவலுக்கான செலவை மனுதாரர் தரப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.