/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாம்பரம் ரயிலை தினமும் இயக்க பயணிகள் வலியுறுத்தல்
/
தாம்பரம் ரயிலை தினமும் இயக்க பயணிகள் வலியுறுத்தல்
ADDED : மே 30, 2024 03:42 AM
மதுரை: தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கல்லிடைக்குறிச்சி பயணிகள் நலச்சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
செங்கோட்டையில் இருந்து தென்காசி, கல்லிடைக்குறிச்சி, நெல்லை, திருவாரூர் வழியாக தாம்பரம் வரை வாரம் மும்முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் உமர் பாரூக், இணைச் செயலாளர் அப்துல் சமது, துணைப் பொருளாளர் ஷரீப், ஆலோசகர்கள் ஜான் பால், அபுல் ஹசன், நிர்வாகி இஸ்மாயில் ஆகியோர் மதுரை கூடுதல் மேலாளர் செல்வம், முதுநிலை வணிகவியல் மேலாளர் கணேஷ், முதுநிலை பொறியாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், முதுநிலை இயக்கவியல் மேலாளர் பிரசன்னாவை சந்தித்து மனு வழங்கினர்.
அத்துடன் திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக சென்னை மற்றும் பெங்களூரு போன்ற ஊர்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும்.
கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் போன்ற ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மை 24 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.