ADDED : மே 26, 2024 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: தனியாமங்கலம் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நேற்று துவங்கியது.
இரண்டு நாட்கள் நடக்கும் திருவிழாவின் முதல் நாள் நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்க பெற்றவர்கள் நேற்று மாலை இடையவலசை குதிரை பொட்டலில் இருந்து புரவிகளை சுமந்து தனியாமங்கலம் மந்தைக்கு கொண்டு வந்தனர். இன்று (மே 26) மந்தையில் இருந்து புரவிகளை அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்வர்.