/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை சொக்கநாதருக்கு செப்.11 ல் பட்டாபிேஷகம்: செப்.13ல் புட்டுத்திருவிழா

ADDED : ஆக 17, 2024 02:12 AM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா ஆக., 30 காலை 9:55 முதல் 10:19 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல்கள் ஆவணி மூலத்திருவிழாவில் நடக்கும். செப்.,5ல் கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடலுடன் திருவிழா துவங்குகிறது. செப்.,6ல் நாரைக்கு மோட்சம் அருளியது, செப்., 7 மாணிக்கம் விற்றது, செப்., 8 தருமிக்கு பொற்கிழி வழங்கியது, செப்.,9 உலவாக்கோட்டை அருளியது, செப்.,10 பாணனுக்கு அங்கம் வெட்டியது, அன்றிரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு நடக்கிறது.
செப்.,11ல் காலை வளையல் விற்ற திருவிளையாடலும், அன்று மாலை 6:30 முதல் 6:45 மணிக்குள் சொக்கநாதருக்கு பட்டாபிேஷகமும் நடக்கிறது. செப்.,12 நரியை பரியாக்கியது, செப்.,13 புட்டுக்கு மண் சுமத்தல், செப்.,14ல் விறகு விற்ற திருவிளையாடல் நடக்கிறது. செப்.,15 அம்மனும், சுவாமியும் இரவு சப்தாவர்ணத்தில் மாசி வீதிகளில் உலா வருகின்றனர்.
செப்.,20ல் மாலை 6:15 மணிக்கு அம்மனுக்கும், சுவாமிக்கும் மகா ருத்ராபிேஷகம், பஞ்சமுக அர்ச்சனை, தீபாராதனை நடக்கிறது.