ADDED : ஆக 02, 2024 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக மதுரைக் கோட்ட அமலாக்க அதிகாரிகள் தேனி, மதுரை மாநகர் மின்பகிர்மான வட்டம் ஜெயமங்கலம், எ.வாடிப்பட்டி, பெரியகுளம், எரசக்கநாயக்கனுார், சின்னமனுார், மயிலாடும்பாறை, கன்னிசேர்வைபட்டி, தம்மம்பட்டி, கூடலுார், ஓடைபட்டி, காமாட்சிபுரம், தேனி, சின்னஓவுலாபுரம் பகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மொத்தம் 27 வீடுகளில் மின் திருட்டை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு 20 லட்சத்து 38 ஆயிரத்து 94 ரூபாய் அபராதமாக விதித்தனர். சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் சமரசத் தொகையாக 82,000 ரூபாய் செலுத்தினர். இதனால் அவர்கள் மீது புகார் எதுவும் பதிவு செய்யவில்லை.
பொதுமக்கள் மின்திருட்டு குறித்து 94430 37508ல் தெரிவிக்கலாம் என மதுரை செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தார்.