ADDED : ஜூன் 13, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அரசியல் சாராத போக்குவரத்து துறை ஓய்வூதியர் நலச்சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் ராஜா தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகன், அழகப்பன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கணபதி சுந்தரம் வரவேற்றார். செயலாளர் சேகர், அலுவலக செயலாளர் அய்யனாரப்பன், நிர்வாகிகள் மாரப்பன், பாஸ்கர், மெய்யப்பன், சீனிவாசன், சாமிநாதன், தமிழ்ச்செல்வன், சந்தானம், கணேசன், திலகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போக்குவரத்து துறையினருக்கு அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு சட்டப்படியான ஒப்பந்த உயர்வுகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி நாராயணன் நன்றி கூறினார்.
