ADDED : ஆக 05, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர்.
அமாவாசை தினங்களில் இறந்த முன்னோருக்கு சரவணப் பொய்கையில் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
நேற்று ஆடி அமாவாசை என்பதால் வழக்கத்தை காட்டிலும் அதிகமானோர் வந்தனர்.
ஒருமணி நேரம் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்து சென்றனர். கோயில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.