/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வரிச்சியூரில் முடங்கிய சுகாதார நிலையத்தால் மக்கள் அவதி
/
வரிச்சியூரில் முடங்கிய சுகாதார நிலையத்தால் மக்கள் அவதி
வரிச்சியூரில் முடங்கிய சுகாதார நிலையத்தால் மக்கள் அவதி
வரிச்சியூரில் முடங்கிய சுகாதார நிலையத்தால் மக்கள் அவதி
ADDED : மே 06, 2024 06:09 AM

மதுரை : 'அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், சாதாரண மருத்துவ தேவைக்கும் 20 கி.மீ. பயணித்து மதுரைக்கு செல்ல வேண்டியதுள்ளது' என வரிச்சியூர் கிராம மக்கள் மனம் குமுறுகின்றனர்.
மதுரை கிழக்கு ஒன்றியம் வரிச்சியூர் வட்டார கிராமங்களில் 2000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் உள்ள சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதால் மக்கள் அடிப்படை மருத்துவ வசதி இன்றி தவிக்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்காததால் மருத்துவ வசதியின்றி மிகவும் சிரமப்படுகிறோம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
வரிச்சியூர் குமரேசன் கூறியதாவது: எனக்கு நினைவு தெரிந்த வரை எப்போது சுகாதார நிலையம் திறந்திருந்தது என தெரியவில்லை. பல ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதால் அதன் சுற்றுப்புறங்களில் புதர்கள் வளர்ந்து பாம்பு, விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
சுகாதார நிலைய கட்டடமும் மோசமான நிலையில் பராமரிப்பின்றி இருக்கிறது. சாதாரண காய்ச்சல் என்றாலும் கூட 20 கி.மீ., பயணித்து மதுரைக்கு செல்லும் நிலையுள்ளது. பஸ் வசதியும் போதுமானதாக இல்லை. இதனால் எங்களுக்கு பணமும், நேரமும் விரயமாகிறது என்றார்.