ADDED : மே 24, 2024 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் வசந்த உற்ஸவம் நடந்த பத்து நாட்களும் பெருமாள் அழகர்மலையில் மழை பொழிய வைத்து குளிர்வித்ததாக பக்தர்கள் 'நெகிழ்ச்சி' தெரிவித்தனர்.
கோடையில் வெயிலின் வெப்பத்தை பெருமாள் உணராமல் இருப்பதற்கு வைகாசி வசந்த உற்ஸவம் கள்ளழகர் கோயில் வசந்த மண்டபத்தில் நடைபெறும். மண்டபத்தை சுற்றிலும் தண்ணீரால் நிரப்பி, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு சுவாமி காட்சியளிப்பார்.
ஆனால் இந்தாண்டு வசந்த உற்ஸவம் துவங்கிய நாள் முதல் மாலையில் அழகர் மலையை சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து பத்து நாட்கள் மழை பெய்தது. சுந்தரராஜபெருமாள் தன்னை குளிர்வித்த பக்தர்களை குளிர்விக்கும் வகையில் தொடர் மழையை தந்ததாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.