ADDED : ஜூலை 31, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் ஒன்றிய அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
தாலுகா செயலாளர் தனசேகரன் தலைமை வகித்தார். நுாறு நாள் வேலை திட்டத்தில் நுாறு நாளும் வேலை வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு சட்டப்படி ரூ.319 வழங்ககோரி கோஷமிட்டனர்.
மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன், மா. கம்யூ., மாநில குழு உறுப்பினர் பாலா, தாலுகா செயலாளர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் மணவாளன், உள்ளிட்டோர் பி.டி.ஓ., ரத்தினகலாவதியிடம் மனு கொடுத்தனர்.

