நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி பி.டி.ஒ., கார்த்திகேயினியிடம் வலைச்சேரிபட்டி மக்கள் மனு கொடுத்தனர்.
அதில் வலைச்சேரிபட்டி சீத்தாமலையில் இருந்து முழம்பு கண்மாய் செல்லும் அம்மன் ஊருணியில் தடுப்பணை கட்ட ஒன்றிய அதிகாரிகள் பள்ளம் தோண்டினர்.
தடுப்பணை கட்டுவதால் அம்மன் ஊருணி நிரம்பி அருகே பட்டா இடங்களில் குடியிருப்புக்குள் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுவர். அதனால் தடுப்பணையை மாற்றி அமைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். 'பொறியாளரிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாக' பி.டி.ஓ., கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர்.