நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் நகராட்சி 17 வது வார்டு குமார் நகர் குடியிருப்பு நலச் சங்கத்தின் கவுரவ தலைவர் பாலகிருஷ்ணன், தலைவர் சோனை தலைமையில் கமிஷனர் பாரத்திடம் மனு அளிக்கப்பட்டது.
அதில் குமார் நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கழிவுநீர், வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.