ADDED : ஜூலை 31, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் இ.எஸ்.ஐ.,சி.யின் தொழிலாளர்களை சென்றடைதல், வருங்கால வைப்பு நிதியின் (பி.எப்.,) உங்கள் அருகில் 2.0 என்ற குறைதீர் கூட்டம் நடந்தது.
மண்டல துணை இயக்குனர்கள் மீனாட்சி சுந்தரம், விஜயன், அமலாக்க அலுவலர் ஹேமமாலினி, பி.எப்., நிறுவனத்தின் ஆணையர் சுப்பிரமணி, உதவி ஆணையர் சுரேஷ் ஆகியோர் குறைகளை கேட்டறிந்தனர். இ.எஸ்.ஐ.சி.,யின் விதிகளுக்குட்பட்டு உடனுக்குடன் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டது. இம்மாதத்தில் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு அதற்கான பென்ஷன் தொகை வழங்கப்பட்டது. தத்தனேரி இ.எஸ்.ஐ.சி., கிளை அலுவலக மேலாளர் ஜெயஸ்ரீ ஏற்பாடு செய்திருந்தார்.