ADDED : ஜூலை 24, 2026 07:11 PM
மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் மருந்தியல் கல்லுாரி, இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்க மதுரை கிளை சார்பில் சர்வதேச மேம்பட்ட மருந்தியல் அறிவியல் கருத்தரங்கு நடந்தது.
ஆரோக்கிய உலகிற்கான எல்லைகளைத் தாண்டிய செயற்கை நுண்ணறிவு, பார்மகோபியா தரநிலை, நானோ மருத்துவத்தை ஒருங்கிணைத்தல் எனும் தலைப்பில் விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், சுகாதாரத்துறை வல்லுநர்கள் விவாதித்தனர். சுகாதார சேவைகள், மருந்தியில் கல்வியை வலுப்படுத்தி ஏ.ஐ., தொழில்நுட்பம், ஆராய்ச்சி தேவை என கல்லுாரி டீன் அருள் சுந்தரேஷ் குமார் தெரிவித்தார். துணை முதல்வர் மல்லிகா, மருந்தியல் கல்லுாரி முதல்வர் வெங்கட ரத்தினகுமார், இயக்குநர் ஹேமாவதி, இந்திய பார்மகோபியா ஆணைய செயலாளர் கலைச்செல்வன், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன டாக்டர் ரமேஷ்குமார், மலேசிய எய்ம்ஸ்ட் பல்கலை இணைப்பேராசிரியர் முத்துராமன், பெப்சிகோ நிறுவன ஆராய்ச்சி டாக்டர் சங்கர் கலகோட்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
