ADDED : ஜூன் 05, 2026 09:31 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: ராமநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு த.வெ.க.,மற்றும் வனம் நலம் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் நந்தகோபால் தலைமை வகித்தார். விவசாய அணி சாந்தகுமார், பேரூர் இணைச்செயலாளர் ஆண்டனி முன்னிலை வகித்தனர். ஆசிரியை கோமதி வரவேற்றார்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மரங்களின் அவசியம் குறித்து வனம் நல இயக்க தன்னார்வலர்கள் ஈஸ்வரன், தங்கராஜ், கணேசன், கிருஷ்ணமூர்த்தி மாணவர்களுக்கு விளக்கி இனிப்பு வழங்கினர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
