நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மதுரை மாவட்டம் மேலவளவு ஸ்டேஷன் போலீஸ்காரர் ஜெயக்குமார் 45. இவர் கீழவளவில் ஒரு பெண்ணிடம் பழகி வந்தார்.
இந்நிலையில் தனது 12 வயது மகளுக்கு ஜெயக்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகஅப்பெண் சைல்டு லைனுக்கு (1098) தகவல் தெரிவித்தார். குழந்தைகள் நல அலுவலர் ஆஷா புகாரில், ஜெயக்குமார் மீது மேலுார் மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

