ADDED : செப் 06, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீஸ் சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
புதுார் மூன்றுமாவடியில் துவங்கி தல்லாகுளம்பெருமாள் கோயில், மதிச்சியம் முதல் செல்லுார்கபடி சிலை வரை, ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் முதல் பாலிடெக்னிக் கல்லுாரி, திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முதல் சன்னதி தெரு வழியாக அறநிலையத்துறை அலுவலகம் வரை, திடீர்நகர் மேலவாசல் முதல் நேதாஜி ரோடு வழியாக அணிவகுப்புகள் நடந்தன.
போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் அந்தந்த சரக உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்றனர்.