ADDED : மே 04, 2024 05:36 AM

கார் கண்ணாடி உடைப்பு
மேலுார்: பெருமாள்பட்டி நியாஸ் அகமது 38, தனது வீட்டிற்கு முன்னால் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடி நேற்று முன்தினம் இரவு நொறுங்கி கிடந்ததை கண்டார். இதேபோல சிவகங்கை ரோட்டில் மேலும் பல கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு கிடந்தது. மதுபோதையில் கண்ணாடிகள் உடைக்கப்படுவதாக பொதுமக்கள் சந்தேகமடைந்துள்ளனர். போலீசார் ரோந்து சென்று பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
பைக்கில் சென்றவர் நாயால் பலி
பேரையூர்: பேரையூர் தாலுகா பி.ஆண்டிபட்டி காளியப்பன் 55. இவர் டி.கல்லுப்பட்டி ரோட்டில் டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) சென்று கொண்டிருந்தார். அப்போது நாய் குறுக்கே வந்தது இதில் தடுமாறி கீழே விழுந்து இறந்தார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுப்பெண் தற்கொலை
மேலுார்: து.லெட்சுமிபுரம் சினேகா 19, நா. கோயில்பட்டி மகேசுக்கும் ஏப். 22ல் திருமணம் நடந்தது. கணவர் மற்றும் மாமியார் பழ வியாபாரத்திற்கு செல்வதால் சினேகா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதனால் மே 2ல் அம்மா ராதாவிடம் வீட்டுக்கு வருவதாக கூறவே அவரை சமாதானப்படுத்திச் சென்றார். நேற்று முன்தினம் மாலை விட்டில் சினேகா துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மேலுார் எஸ்.ஐ., ரமேஷ்பாபு விசாரிக்கிறார்.