ொழிலாளி தற்கொலை
மதுரை: ஈரோடு சென்னிமலை குமரேசன். நெசவுத்தொழிலாளி. தொழில் செய்து நஷ்டமடைந்ததால் மதுரைக்கு குடும்பத்துடன் வந்த அவர் எஸ்.ஆலங்குளம் பாரதிபுரத்தில் குடியிருந்தார். கோவைக்கு வேலைக்கு சென்று அட்வான்ஸ் பணம் பெற்று ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்தார். மனமுடைந்து துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
நெருப்பில் கருகி பலி
மதுரை: சர்வேயர்காலனி பாண்டியன்நகர் 4வது தெருவை சேர்ந்தவர் பாக்கியம் 73. இரவு துாங்கும்போது கொசுவர்த்தி சுருளை பற்றவைத்து துாங்கினார். அதில் இருந்த நெருப்பு பொறி பறந்து துாங்கிய மெத்தையில் பற்றியது. உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். திருப்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.
வேன் கவிழ்ந்து நால்வர் காயம்
பேரையூர்: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா உப்புத்துறை வெள்ளைச்சாமி 38. உறவினர்களுடன் வேனில் கள்ளிக்குடி அருகே குலதெய்வகோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பேரையூரில் இருந்து சாப்டூர் செல்லும் சாலையில் சென்ற போது கணவாய்ப்பட்டி விலக்கு அருகே டூவீலர் குறுக்கிடவே வேன் நிலை தடுமாறி ஓடைக்குள் கவிழ்ந்தது. இதில் கிருஷ்ணன் 45. முத்துப்பாண்டி 56, வெயில்அக்காள், கருப்பாயி காயமடைந்து தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர்கள் மோதி கொத்தனார் பலி
திருமங்கலம்: கள்ளிக்குடி லாலாபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் ஆறுமுகம் 48, நேற்று மாலை வேலை முடிந்து கள்ளிக்குடி கல்லுப்பட்டி ரோட்டில் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) அகத்தாபட்டி அருகே சென்ற போது எதிரே சோளம்பட்டியைச் சேர்ந்த சோலையப்பன் 39, வந்த டூவீலருடன் மோதியதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த சோலையப்பன் மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார்.
பெண்ணிடம் நகை பறிப்பு
திருமங்கலம் : உசிலம்பட்டி ஆர்.கே.தேவர் தெரு சதீஷ் மனைவி கோடீஸ்வரி 27. கப்பலுார் தனியார் மில்லில் வேலை பார்க்கிறார். தனது டூவீலரில் கட்டத்தேவன்பட்டிக்கு வந்து அங்கு டூ வீலரை நிறுத்திவிட்டு மில் வேனில் செல்வது வழக்கம். நேற்று டூவீலரில் வந்து கொண்டிருந்தார். கன்னியம் பட்டி பிரிவு அருகே டூவீலரில் பின்னால் வந்த 25 வயது வாலிபர் கோடீஸ்வரியை சத்தம் போட்டுள்ளார். அவர் நின்றதும் அந்த நபர் கோடீஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மாயமானார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
டானிக் குடித்த சிறுமி பலி
மதுரை: தபால்தந்தி நகர் பாமா நகரை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டி. கொத்தனார். இவரது மகள் சிவரஞ்சனி 4. இவருக்கு சளிக்காய்ச்சல் இருந்ததால் அப்பகுதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வீட்டில் இருந்தபோது காய்ச்சல் அதிகமானது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர், பரிந்துரைத்த இருமல் டானிக்கை அவருக்கு அதிக அளவில் கொடுத்ததால் பாதிப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. டானிக் அதிகம் குடித்ததே இறப்புக்கு காரணமா என தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.