ADDED : ஜூலை 30, 2024 01:43 AM
ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
மதுரை: கீழபனங்காடியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி64. நேற்று ேஷர் ஆட்டோவில் வந்தபோது பனங்காடி போலீஸ் செக்போஸ்ட் அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இறந்தார். தல்லாகுளம் போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலரில் சென்றவர் பலி
திருமங்கலம்: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் முருகன் மகன் ஆனந்த கிருஷ்ணன் 19. சென்னை தனியார் நிறுவன ஊழியர். நேற்று ஆனந்த கிருஷ்ணன், அதே ஊரை சேர்ந்த மூர்த்தியுடன் 19, ஒரே டூவீலரில் சென்னையில் இருந்து சாத்தான்குளம் சென்றார். கள்ளிக்குடியில் காரியாபட்டி பிரிவு அருகே டூவீலர் கட்டுப்பாட்டை இழந்ததால் மீடியனில் மோதி கீழே விழுந்தனர். ஆனந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த
மூர்த்தி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் விபத்தில் பெண் பலி
திருமங்கலம்: மதுரை பழங்காநத்தம் சிவ முருகன் மனைவி கவுரிசெல்வி 25, நேற்று திருமங்கலம் அருகே உறவினர் வீட்டிற்கு வந்தார். கணவருடன் டூவீலரில் அமர்ந்து பழங்காநத்தம் சென்றார். ராஜபாளையம் ரோட்டில் இருந்து நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் சென்ற போது வாகனம் ஒன்று மோதியதில் கவுரிசெல்விக்கு தலைக் காயம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று பலியானார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.