தேடப்படும் குற்றவாளிகள்
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கொண்டநாயக்கபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் (55). இவர் மீது மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். இதேபோல், மதுரை செல்லுார் முனியாண்டி கோவில் 3வது தெருவில் வசித்து வரும் குமார் (எ) முத்துராமலிங்கம் (எ) மோதிரகுமார் (44). கடந்த 2015 ஜூன் 8ல் சுப்பிரமணியபுரம் போலீசார் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தனர்.
இவ்விரு வழக்குகளும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் 'கல்தா' கொடுத்து வந்த இவ்விருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. செப்., 11ல் ராமரும், 18ல் குமாரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.---
டிரைவரிடம் வழிப்பறி
வாடிப்பட்டி: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் பழனிச்சாமி 47, இவர் நேற்று முன்தினம் இரவு கங்கை கொண்டானில் இருந்து திருப்பூர் சென்றார். வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி சந்திப்பில் இரவு நேரம் லாரியை நிறுத்திவிட்டு துாங்கினார். அங்கு வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி தாக்கி பழனிச்சாமியிடம் இருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் அலைபேசியை பறித்து சென்றனர். வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.