விபத்தில் வாலிபர் பலி
சோழவந்தான்: ராயபுரம் வேதமுத்து மகன் சாம்ராஜ் 20, மில் தொழிலாளி ஆக.3 இரவு நெடுங்குளம், தச்சம்பத்து ரோட்டில் டூவீலரில் சென்றார். அங்குள்ள தொழிற்சாலை அருகே எதிரே வந்த ஷேர் ஆட்டோ மோதியதில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு இறந்தார். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆடு திருடிய கும்பல் கைது
உசிலம்பட்டி: மருதம்பட்டி, குஞ்சாம்பட்டி, பூதிப்புரம், குப்பணம்பட்டி, உத்தப்பநாயக்கனுார் பகுதிகளில் அடுத்தடுத்து ஆடுகள் திருடு போயின. போலீஸ் டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் ஆனந்த், எஸ்.ஐ., பாலமுருகன் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். உசிலம்பட்டி தாலுகா போலீசார் ஆக. 4, இரவு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில், அவர்கள் கம்பம் வடக்குபட்டி சூரியா 24. நவீன்குமார் 23, கிஷோர் 19 என்பதும், கிராமப்பகுதியில் ஆடு திருடும் கும்பல் என்பதும் தெரிந்தது. இவர்கள்தான் உசிலம்பட்டி பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர்.
------ ரோலர் டிரைவர் பலி
உசிலம்பட்டி: பேரையூர் ரோட்டில் கிராவல் மண் ஏற்றிய லாரியை டிரைவர் ஜெயபிரகாஷ் 33, ஓட்டிச் சென்றார். உசிலம்பட்டி நகராட்சி மருத்துவமனை அருகே சென்ற போது எதிரே, ரோடு ரோலர் டிரைவர் அயோத்திபட்டி சின்னான் 45, டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) வந்தார். அந்த டூவிலரில் லாரி மோதியதில் சின்னான் அதே இடத்தில் பலியானார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.