தர்காவில் திருட்டு
மதுரை: நரிமேட்டில் சையதுஷா அஜவுலியா தர்கா உண்டியலில் ரூ.20 ஆயிரம், வெள்ளி குத்துவிளக்கு திருடப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் ஒரு நபர் திருடிச்செல்வது பதிவாகி இருந்தது. தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற மூவர் கைது
அலங்காநல்லுார்: பி. மேட்டுப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற அதேபகுதி தீனதயாளன் 22, சிவரஞ்சன் 29, அலங்காநல்லுார் கலைவாணர் நகர் மணி கார்த்தியை 28, கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1. 300 கிலோ கஞ்சா, ரூ.3500 பறிமுதல் செய்யப்பட்டது.
வாலிபர் கொலை
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா கூடக்கோவிலை சேர்ந்த கருப்பசாமி 35, கூடக் கோவிலில் சலுான் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று இவர் கல்லணைக்கு வேலை தொடர்பாக சென்றுள்ளார். நேற்று இரவு கல்லணை கண்மாய் கரையில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.