sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : செப் 15, 2024 12:59 AM

Google News

ADDED : செப் 15, 2024 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

4 பேர் மீது கந்துவட்டி வழக்கு


மதுரை: கிருஷ்ணாபுரம் காலனி இளங்கோ 41. சாப்ட்வேர் தொழிலுக்காக எல்லீஸ்நகர் லதா மகேஷ் 48, ராஜ்கிரண் 30, புதுார் பிரபு 43, தல்லாகுளம் கவிதா 44 ஆகியோரிடம் ரன் வட்டிக்கு சில லட்சம் ரூபாய் கடனாக பெற்றார். அதற்குரிய வட்டியை செலுத்தி வந்தார். ரூ.5 லட்சம் திருப்பி செலுத்திய நிலையில் 'அது ரன் வட்டிக்கே சரியாக போய்விட்டது' என்றுக்கூறி மேலும் வட்டி தரவேண்டும் என அலுவலகம் புகுந்து மிரட்டியதாக 4 பேர் மீது தல்லாகுளம் போலீசார் கந்துவட்டி தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மகளுக்கு 'தொல்லை' தொழிலாளி கைது


திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகாவை சேர்ந்த கட்டட தொழிலாளி 31, இவருக்கு 14 வயதில் மகள், 10 வயதில் ஒரு மகன் உள்ளனர். அந்தத் தொழிலாளி செப்.7 இரவு குடிபோதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மகள் சத்தம் போட்டதால் தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மகன் எழுந்து சிறுமியை காப்பாற்றினர். இது குறித்து ஊர் நல அலுவலர் கவுசல்யா புகாரில்திருமங்கலம் மகளிர் போலீசார் தொழிலாளியை கைது செய்தனர்.

துாய்மை பணியாளர் பலி


மேலுார்: தும்பைபட்டி ராஜா 48. அதே ஊராட்சியில் துாய்மை பணியாளராக பணிபுரிந்தார். நேற்று து.அம்பலகாரன்பட்டியில் சுந்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பந்தயத்தின்முன்பு வெற்றி பெற்றவர்கள் குறித்து அறிவிப்பு செய்வதற்காக முன்னால் சென்ற வேனில் ராஜா சென்றார். அட்டப்பட்டி ரோட்டில் உள்ள வேகத்தடையில் வேன் ஏறவே நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் ராஜா இறந்தார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

கடன் தொந்தரவு ஒருவர் தற்கொலை


மேலுார்: கத்தப்பட்டி ராஜா 45, மலைச்செல்வி 38. இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் பேக்கரி நடத்தினர். டோல்கேட் ஊழியர் அலங்காநல்லுார் வினோத்திடம் ரூ.35 ஆயிரம் கடன் வாங்கினர். கடனை திருப்பித் தருமாறு வினோத் சத்தம் போட்டார். மன உளைச்சலால் தம்பதி செப்.11ல் விஷமருந்தினர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராஜா நேற்று இறந்தார். மலைசெல்வி சிகிச்சை பெற்று வருகிறார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டில் நகை திருட்டு


கள்ளிக்குடி: மணிநகர் ரவிச்சந்திரன்மனைவி சந்திர புஷ்பம் 48. கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். மகன், மகள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். விருதுநகரில் உள்ள பெற்றோரை பார்க்க சென்ற நிலையில் வீட்டின்கதவை உடைத்து 10 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.80ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

வேன் மோதி ஒருவர் பலி


கொட்டாம்பட்டி: அம்பலகாரன்பட்டி ராமு 48. சிங்கம்புணரியில் குடும்பத்துடன் வசிக்கிறார். துபாயில் பணிபுரிந்தவர் ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு டூவீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. 18 சுக்காம்பட்டி அருகே மினிவேன் மோதியதில் இறந்தார். கொட்டாம்பட்டி எஸ்.ஐ., செல்வகுமார் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us