விபத்தில் தாய், பச்சிளம் குழந்தை பலி
சிலைமான்: தாதப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் 32. இவரது மனைவி பாக்யலட்சுமி 26. நேற்றுமுன்தினம் தனது 21 நாள் குழந்தை தன்விகாவுடன் மதுரையில் இருந்து மினி வேனில் வீட்டிற்கு சென்றார். அவருடன் சிலர் பயணித்தனர். விரகனுார் ரிங் ரோடு அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் பாக்யலட்சுமி, தன்விகா இறந்தனர். 3 பேர் காயமுற்றனர். சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆசிரியை தற்கொலை
உசிலம்பட்டி: மூக்கையாத்தேவர் தெருவில் வசிப்பவர் டிரைவர் சாமி 34. இவரது மனைவி சுபிதா 26. தனியார் பள்ளி ஆசிரியர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து 3 வயதில் பெண்குழந்தை உள்ளது. நேற்று அதிகாலை சுபிதா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உசிலம்பட்டி போலீசார், ஆர்.டி.ஓ., விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
உண்டியலை உடைத்து திருட்டு
திருமங்கலம்: திரளி முத்து அய்யனார் கோயில் பூஜை அறையில் 2 இரும்பு உண்டியல்கள், ஒரு சில்வர் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த சில ஆயிரம் பணம், அறையில் இருந்த குத்து விளக்கு, மணி உள்ளிட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பூஜை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி
உசிலம்பட்டி: மலைப்பட்டி ரவிக்குமார் 35, தமிழ்ச்செல்வி 30, தம்பதிக்கு 4 வயதில் மகளும், ஒரு வயதில் ஸ்ரீவேந்தர் என்ற மகனும் உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் தோசை வியாபாரம் செய்து வரும் இவர்கள் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தனர். நேற்று மாலை வீட்டு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் இருந்த வாளியில் விழுந்து மூச்சு திணறி பலியானார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.