ADDED : மார் 03, 2025 04:03 AM
தீயில் கருகிய வேன்
கொட்டாம்பட்டி: பள்ளபட்டியைச் சேர்ந்தவர் அஜ்மல்கான் 40, நேற்று முன்தினம் இரவு தனது வேனில் அதே பகுதி வியாபாரிகளிடம் தேங்காய் மஞ்சி விலைக்கு வாங்கினார். இன்று (மார்ச் 2) நத்தம் சென்று விற்பனை செய்வதற்காக வேனை சர்வீஸ் ரோட்டில் நிறுத்தி இருந்தார். நள்ளிரவு 12:30 மணியளவில் வேனில் இருந்த தேங்காய் மஞ்சி பற்றி எரிந்ததில் வேன் பாதிப்பானது. கொட்டாம்பட்டி, துவரங்குறிச்சி தீயணைப்பு வண்டி மூலம் தீ அணைக்கப்பட்டது. கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை
உசிலம்பட்டி: வில்லாணியைச் சேர்ந்தவர் விஜயகுமார் 29. பெற்றோர் இறந்து போன நிலையில் திருமணம் ஆகாமல் வீட்டில் தனியாக வசித்தார். அவ்வப்போது சகோதரர் ராமு வீட்டுக்குச் சென்று வருவார். சில தினங்களாக தன்னை யாரோ கூப்பிடுவது போன்ற கனவு வருவதாக கூறிவந்துள்ளார். நேற்று சகோதரர் வீட்டிற்கு சென்றவர், அனைவரும் வெளியே சென்றிருந்ததால், வீட்டில் இருந்த அரிவாள்மனையால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு உயிரிழந்தார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.